தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்..? மூன்று அமைச்சர்கள் நீக்கம்..? பரபரக்கும் தமிழகம்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் பெற்றுவந்துள்ள
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதே மின்சாரம், மதுவிலக்குத்துறை இலாகாக்களை வழங்க உள்ளதாகவும்,சிறுபான்மைத்துறை பிரதிநிதியாக இருப்பவருக்கு பதிலாக புதியவர் ஒருவர் பதவியேற்கவுள்ளதாகவும்,பால்வளத்துறை,சுற்றுச்சூழல் துறை ஆகியதுறைகளும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும்,தென்மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த இளைய நபர் பருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் உள்ளாட்சித்தேர்தல் நெருங்கிவரும் நேரமென்பதாலும் வரும் 2026 சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளும்வண்ணம் கட்சிக்குள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்திட துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்களும் கசிந்துவருகின்றன.மேலும் துணை முதல்வருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட வேண்டும்.என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டுவருக்கின்றன.அதேசமயம் உதயநிதிஸ்டாலின் தாத்தா காலத்து சீனியர் அமைச்சர்களின் இலாகாக்களை பறித்து தனக்கு தர வேண்டாம். இருக்கிற விளையாட்டுத்துறையே போதும் என்று கூறியதாக ஒருதகவல் கசிந்துவருகிறது.எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் உள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கித் தர இருக்கிறார் என்ற தகவலும் உலாவருகிறது.எதுவாகினும் மஹாளய அமாவாசைத்தினத்திற்குபின்னர் நல்ல மாற்றம் அமைச்சரவையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Tags : தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்..?மூன்று அமைச்சர்கள் நீக்கம்..?பரபரக்கும் தமிழகம்.