கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்து கொண்டிருக்க முடியாது - ஆவேச சசிகலா!

by Editor / 30-05-2021 12:48:48pm
கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்து கொண்டிருக்க முடியாது - ஆவேச சசிகலா!

தனது ஆதரவாளர்களுடன் சசிகலா பேசியதாக இரண்டாவது நாளாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அவர், கட்சிக்குள் பூசல் நிலவி வருவது குறித்து வருத்தம் தெரிவித்து விரைவில் மீண்டும் அரசியலுக்கு வந்துவிடுவதாக பேசுவதுப்போல் உள்ளது. அந்த ஆடியோவில் சசிகலா பேசியதாவது:-

''இது கொரோனா நேரம், எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க. விரைவில் நல்ல முடிவு எடுக்கிறேன். சீக்கிரம் வந்துரலாம். கவலைப்படாதீங்க. அவங்க சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறத பார்க்குறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு கட்சிய வளர்த்தோம். அது வீணாகுறத பார்த்துட்டு இருக்க முடியாது. அதனால விரைவில வந்துருவேன்.

கொரோனா தாக்கம் குறைஞ்சதும் உங்க எல்லாத்தையும் பார்க்குறேன். கட்சிய நல்லா கொண்டு வந்துருவோம். கவலைப்படாதீங்க'' என்று தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo