தனிப்படை போலீசார் அதிரடி சோதனை; ராக்கெட் ராஜா வீட்டில் துப்பாக்கி பறிமுதல்: 

by Editor / 26-01-2025 10:43:47pm
தனிப்படை போலீசார் அதிரடி சோதனை; ராக்கெட் ராஜா வீட்டில் துப்பாக்கி பறிமுதல்: 

நெல்லை: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளியுமான ஜேக்கப் நேற்று நெல்லை தனிப்படைபோலீசாரால்  கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து ராக்கெட் ராஜா வீட்டில் தனிப்படைபோலீசார்  நடத்திய சோதனையில் துப்பாக்கி, மான்ெகாம்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.நெல்லை அருகே தாழையூத்தை சேர்ந்தவர் ஜேக்கப் (37). ராக்கெட் ராஜா கூட்டாளி. இவர் பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ கொலை வழக்கிலும், பிரபல ரவுடி சிந்தா சரவணன் கொலை வழக்கிலும் தொடர்புடையவர். கடந்த சில நாட்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் இவரை தேடி வந்த நிலையில், இவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்தன. வள்ளியூர் சரக டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில், நெல்லை மாவட்ட எஸ்பி. சிலம்பரசனின் உத்தரவுப்படி தனிப்படையினர் அங்கு சென்று ஜேக்கப்பை கைது செய்தனர்.அவர் கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில், தனிப்படையினர் திசையன்விளை ஆனைக்குடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசார் சோதனையிட்டபோது ஒரு நாட்டு துப்பாக்கி, மான் கொம்பு, அரிவாள்கள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் பழிக்குப்பழியாக யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தோடு ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


 

 

Tags : தனிப்படை போலீசார் அதிரடி சோதனை; ராக்கெட் ராஜா வீட்டில் துப்பாக்கி பறிமுதல்: 

Share via