மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: கவர்னர் ஒப்புதல்

by Editor / 13-06-2025 04:45:04pm
மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: கவர்னர் ஒப்புதல்

தமிழகத்தில் உயிரி மருத்துவக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி இன்று (ஜூன் 13) ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

 

Tags :

Share via