சந்திரசேகர ராவ் பயணித்த ஹெலிகாப்டரில் கோளாறு

by Staff / 06-11-2023 05:07:50pm
சந்திரசேகர ராவ் பயணித்த ஹெலிகாப்டரில் கோளாறு

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பயணித்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேவரகத்ராவுக்கு சென்றபோது ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் தரையிறக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வரும் 30ஆம் தேதி அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க சந்திரசேகர ராவ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

 

Tags :

Share via

More stories