ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி தரக்கூடாது - எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக திமுக அரசு நிராகரிக்க வேண்டும் . முதல்வர் ஸ்டாலின் அவர்களது முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்துபார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக்கூறிய வரலாறு உண்டு.. ஆகவே, கடந்த காலத்தை போல முதல்வர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ள கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :