சென்னையில் பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள்மோதுகின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில்எம் .ஏ. சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 37-வது போட்டியும் அதை தொடர்ந்து லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் 38வது போட்டி நடைபெறுகிறது.
.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன் அணியை சென்னை மைதானத்தில் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மூன்று புள்ளிகளை எடுத்து இருப்பதால் 5 புள்ளிகள் எடுத்தால் அடுத்த கட்ட நகர்வு இருப்பதால் இரு அணிகளுக்கு இடையான போட்டி அதிகமாக இருக்கும்.சென்னை அணிக்கு சொந்த களம் என்பதால் அது அதிக மும்முரம் காட்டி வெற்றி பெறுவதற்கான முனைப்பில் ஈடுபடும். மூன்று முப்பது மணிக்கு வெயிலின் தாக்கம் களத்தில் இறங்கி இருக்கின்ற வீரர்களுக்கு சாதகமாக எவ்வாறு இருக்கும் என்பதை போட்டியின் பொழுது தெரிந்து கொள்ளலாம்.
Tags :


















