மராட்டிய மாநில அரசு அனுமதி ஒயின்’ மதுபானம் அல்ல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கலாம்

by Admin / 28-01-2022 01:54:41pm
மராட்டிய மாநில அரசு அனுமதி ஒயின்’ மதுபானம் அல்ல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கலாம்

மதுபான வகைகளில் ‘ஒயின்’ உள்ளது. இந்த நிலையில் ஒயின் மதுபானம் அல்ல என்றும் அதை சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க மராட்டிய மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது.

நேற்று மராட்டிய அமைச்சரவை சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் ‘ஒயின்’ விற்பனையை அனுமதிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இது விவசாயிகளுக்கு கூடுதல் பழங்கள் சார்ந்த ஒயின் ஆலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்தது.

இது குறித்து ஆளும் கட்சியான சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும் போது, ஒயின் என்பது மதுபானம் அல்ல. ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் அதிக பலன்களை பெறுவார்கள்.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க நாங்கள் இதை செய்கிறோம். சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனையை பா.ஜ.க. எதிர்க்கிறது. ஆனால் அக்கட்சி விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.

ஒயின் விற்பனை தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் மற்றும் கடைகளில் ஒயின் விற்பனையை பின்பற்றலாம்.

வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது. மதுவிலக்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் மது விற்பனை அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்து உள்ளது.

மராட்டிய அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மது அருந்துவதை மாநில அரசு ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகிறது.

இது குறித்து முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும் போது, மராட்டியாவை மதுபான மாநிலமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சிவசேனா- என்.சி.பி.- காங்கிரஸ் அரசாங்கம் தொற்று நோயில் 2 ஆண்டுகளில் மக்களுக்கு உதவவில்லை. ஆனால் மது விற்பனைக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்குவிக்கிறது என்றார்.


 

 

Tags :

Share via