சென்னையில் 34 விமானங்கள் தாமதம்

by Staff / 14-10-2024 05:05:24pm
சென்னையில் 34 விமானங்கள் தாமதம்

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 34 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளன. நிர்வாகக் காரணங்களால் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும், கனமழை மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும் எனவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via