நண்பனை கொலை செய்தவரை கொடூரமாக தாக்கும் சிறுவர்கள்

by Editor / 01-07-2025 03:44:51pm
 நண்பனை கொலை செய்தவரை கொடூரமாக தாக்கும் சிறுவர்கள்

தூத்துக்குடியை சேர்ந்த கோட்டைமுத்து என்பவர், திருவண்ணாமலையில் இருக்கும் தனது காதலி தன்னுடன் சரியாக பேசாததால், காதலியை பார்க்க திருவண்ணாமலை வந்துள்ளார். அங்கு காதலி தம்பியின் நண்பர்கள் மற்றும் கோட்டைமுத்துவிற்கு இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதில் கோட்டைமுத்து தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் ஒரு நபரை குத்தி கொலை செய்துள்ளார். நண்பரை கொலை செய்த கோட்டைமுத்துவை, சக நண்பர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via