அதிமுக பொதுக்குழுக்கூட்டம் -26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

by Admin / 15-12-2024 01:26:39pm
அதிமுக பொதுக்குழுக்கூட்டம் -26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

: மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு இதனை வராமல் தடுக்க தவறிய தமிழக அரசிற்கு கண்டனம்

நீட் தேர்வு விவகாரத்தில் கபட நாடக மால் மாநில அரசுக்கு கண்டனம் .கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்

பெண்கள் புயலின் போது மக்களின் அடிப்படை தேவைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வில்லை.

 மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு உள்ளது.

 சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அதிக வரி விதிப்பு கண்டனம்.

 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்.

 திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

திமுக அரசு ஃபார்முலா 4 கார் பந்தயம் பேனா நினைவுச் சின்னம் போன்றவற்றிற்காக நிதியை வீணடிப்பதற்கு கண்டனம்.

 குடி மராமத்து திட்டத்தை செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

 கோதாவரி ,காவிரி, பரம்பிக்குளம் ,ஆழியாறு, பாண்டியாரு, புன்னம்புழா திட்டங்களை தொடங்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

 இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரி செய்து தேர்தல் நடத்த வேண்டும்.

 திமுக அரசு இஸ்லாமிய சிறை கைதிகளை வெளியே கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்காததக்கு  கண்டனம்

 தமிழ்நாட்டின் நிதி பகிர்வை மத்திய அரசு பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும்.

2026 இல் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஆக்குவோம்

.என பதினாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags :

Share via