அமலாக்கத் துறை , அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் 132 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது... 

by Admin / 04-11-2025 05:32:41am
அமலாக்கத் துறை , அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் 132 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது... 

அமலாக்கத் துறை , அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்திற்குஎதிரான வங்கி மோசடி வழக்கில், நவி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி நாலெட்ஜ் சிட்டி வளாகத்தில் ₹4,462 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 132 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது... 

இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட்மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாகும்.. 2010 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில்,அதன் குழும நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து சுமார் ₹40,185 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது..இந்த வழக்கின் விசாரணையில், நவி மும்பை நிலம் உட்பட, அனில் அம்பானி குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய ₹7,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை இதுவரை பறிமுதல் செய்துள்ளது. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சொத்து பறிமுதல் நடவடிக்கையால் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள், பங்குதாரர்கள் அல்லது ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அனில் அம்பானி கடந்த 3.5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின் கீழ் இந்த தற்காலிக பறிமுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via