பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி
சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சரவணா தங்க நகை மாளிகை ஆகிய இரண்டு கட்டிடங்களுக்கான இடத்திற்காக 2017 ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் கடனை நிர்வாகிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கான நிலுவை தொகையை இந்தியன் வங்கிக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நிலுவை தொகைக்கான கடனை சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று இந்தியன் வாங்கி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியோடு பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
Tags : saravna stores lock