பாஜகவுடன் சரத்குமாரின் சமக கூட்டணி
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன், எல்.முருகன் உள்ளிட்டோருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சமக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :