போதை காளான் விற்பனை செய்த இருவர் கைது

by Staff / 19-02-2024 04:59:59pm
போதை காளான் விற்பனை செய்த இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்கும் குளுமையான சீதோசன நிலையை அனுபவிப்பதற்காக தினம் தோறும் வருகின்றனர்.அதேபோல் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை குறிப்பிட்ட இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போதை காளான் , கஞ்சா, ஸ்டாம்ப் வாங்குவதற்காகவே வருகின்றனர்.கொடைக்கானல் , வட்டக்கானல் , கவுஞ்சி , கூக்கால், பூம்பாறை, பூண்டி , மன்னவனூர் உள்ளிட்ட மேல்மலை பகுதிகளிலும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் போதை பொருட்கள் சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட புதுக்காடு பகுதியைச் சேர்ந்த சிவபாலன் ஆகியோர் போதை காளான் விற்பனைக்காக வைத்திருந்த பொழுது திங்கட்கிழமை காலை 10. 30 மணி அளவில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories