தேர்பவனி விபத்துக்கான காரணம் என்ன..?

தஞ்சை, களிமேடு தேர்பவனியில் தேருடன் இருந்த ஜெனரேட்டர் மின் கம்பியில் சிக்கியுள்ளது. சப்பரத்தை திருப்பியபோது மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து விபத்து.
சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததும் தேர் தீப்பிடித்ததாக முதல்கட்ட தகவல்.
மேலும் அந்தப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை 2 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டதால் விபத்து நடந்ததாகவும் கிராம மக்கள் கருத்து.
தஞ்சை அருகே தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது என்றும்,
ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது என்றும் - விபத்து தொடர்பாக தஞ்சை தீயணைப்பு அதிகாரி(பொறுப்பு) பானுப்பிரியா தகவல்.
தஞ்சை, களிமேடு தேர்பவனிக்கு தீயணைப்புத்துறையிடம் அனுமதி பெறவில்லை தேர்பவனி விபத்து குறித்து அதிகாலை 3 மணியளவில் தகவல் வந்தது என்றும்,தகவல் கிடைத்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தோம் - தீயணைப்புத் துறை அதிகாரி தகவல்.
Tags :