இந்திய காதலரை மணந்த பாகிஸ்தான் பெண் உருக்கமான வேண்டுகோள்

கடந்த 2023-ல் பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் தன்னுடைய 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து உ.பியில் உள்ள காதலர் சச்சின் மீனாவை மணந்து இங்கேயே வசித்து வருகிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா விதித்த பாகிஸ்தானியர்களுக்கான விசா கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், "நான் இப்போது இந்தியாவின் மருமகள், என்னை இங்கேயே இருக்க விடுங்கள்" என மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரிடம் சீமா கோரியுள்ளார்.
Tags :