ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை

by Editor / 12-04-2023 09:35:40am
ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதன்படி நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் இன்று விசாரிக்கின்றனர். வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு முன் கூட்டியே விசாரணைக்கு வருகிறது. தமது மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே அவசர வழக்காக கருதி, விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடினார்.

 

Tags :

Share via

More stories

Logo