பழைய குற்றால அருவியில்காட்டாற்று வெள்ளம் குறைந்தது.

by Editor / 18-05-2024 08:11:03am
பழைய குற்றால அருவியில்காட்டாற்று வெள்ளம் குறைந்தது.

ஆக்ரோசமாக கொட்டிய அருவிநீர் சிறுவனின் உயிரை காவு வாங்கிய பழைய குற்றால அருவியின் தற்போதைய நிலை... கனமழை எச்சரிக்கையால் நீர்வரத்து குறைந்தும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை.. தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது இந்நிலையில் நேற்று பிற்பகல் பழைய குற்றால பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப்பெருக்கில் சிக்கி பரிதாபமாக பலியானான். 

நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் குறைந்து தற்போது பழைய குற்றால அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது.நீர்வரத்து குறைந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில்  தற்போது பழைய குற்றால அருவி பகுதியில் பொதுமக்கள் செல்லாத வண்ணம் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகின்ற மே 21 ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்திற்கு கனமழை கான எச்சரிக்கை உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பழைய குற்றால அருவியில்காட்டாற்று வெள்ளம் குறைந்தது.

Share via