சின்ன காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் தி.மு.க. நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை
சின்ன காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் தி.மு.க. நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சின்ன காஞ்சீபுரம் நசரத்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர். தி.மு.க. நிர்வாகியான இவருக்கு உமா என்ற மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் சொந்தமாக தேங்காய், வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். மேலும் ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
கொரோனா தொற்று காலத்தில் ஆட்டோக்கள் சரி வர இயங்காததால், போதிய வருமானம் இன்றி கடன் தொல்லையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தார்.
இந்த நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டு மாடிப்படி வழியாக கீழே இறங்கும் போது மயக்கம் அடைந்தார்.
இதை பார்த்த கபிலேஷ் தந்தையிடம் கேட்கவே, அவர் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக கருணாநிதியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags :



















