உலக அளவில் 70 நாடுகளில் 14 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை
உலக அளவில் குரங்கு அம்மை கண்டறியப்படும் நிலையில் அதுதொடர்பாக முக்கிய முடிவெடுக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை சுமார் 70 நாடுகளில் 14 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் நோய் பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது. நோய் பரவல் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்யும் குழுவினர் அதனை கட்டுப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்களை பரிந்துரைப்பார்கள் என கூறப்படுகிறது.
Tags :