‘லாபம்’ படத்தின் பாடல் வியாழக்கிழமை வெளியீடு

by Admin / 24-07-2021 07:41:09am
‘லாபம்’ படத்தின்  பாடல் வியாழக்கிழமை வெளியீடு

மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ’லாபம்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது. இப்பாடலை எஸ்.பி ஜனநாதனுக்கு சமர்ப்பிதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பட வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையொட்டி, ’எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் படத்தின் அனைத்து பணிகளையுயும் முடித்துக்கொடுத்துவிட்டார். படம் ஏப்ரலில் வெளியாகிறது’ என்று சமீபத்தில் அறிவித்திருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி. ஏற்கனவே, இப்படத்தின், ’யாழா யாழா’ பாடல் வெளியாகி வரவேற்பை குவித்தது. இந்நிலையில், நாளை ’Yaamili Yaamiliyaa’ இரண்டாவது பாடல் வெளியாகும் என்றும் இப்பாடலை எஸ்.பி ஜனநாதனுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

‘லாபம்’ படத்தின்  பாடல் வியாழக்கிழமை வெளியீடு

 

Tags :

Share via