இந்தியிலும் வானிலை அறிக்கை” - சு. வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

by Staff / 27-03-2025 01:12:10pm
இந்தியிலும் வானிலை அறிக்கை” - சு. வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

சு. வெங்கடேசன் எம்.பி., கூறியதாவது, “தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பாஜக-விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்" என்றார்.

 

Tags :

Share via