உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 இலட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டம், தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய பசுபதிமாரி கடந்த 06/08/2024 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்து தமிழக காவல்துறையில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர்கள் 2017- பேட்ச் காக்கும் உறவுகள் குழு என்ற வாட்ஸ்அப் குழு மூலம் 38 மாவட்டங்களை சேர்ந்த 6802 காவல் நண்பர்களிடம் இருந்து உதவி தொகையாக பெறப்பட்ட ரூ.24,25,900/- தொகையினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் 2017 பேட்ச் காக்கும் உறவுகள் குழு நன்பர்கள் முன்னிலையில் பசுபதி மாரி குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் ஒப்படைக்கப்பட்டது..
Tags : உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 இலட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது