போலி பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு
தீபத்திருவிழாவின் போது அனுமதி பாஸ் பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும், போலி பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்அமைச்சர் சேகர்பாபு பேட்டி :
ஆன்லைன் டிக்கெட் அனைத்தும் முழுவதுமாக ஆன்லைன் மூலம் தான் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் எவ்வித முறைகேடும் நடைபெறாது என்றும், கோயிலுக்குள் அனுமதி அடையாள அட்டை, ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இந்த முறை சிறு தவறும் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், போலி பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருவண்ணாமலை திருக்கோயில் பொறுத்தவரை நமது அமைச்சர் ஆன்மீக வாதியாக இல்லாவிட்டாலும் ஆஸ்திகர், நாஸ்திகர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்தையும் அவரே நேரடியாக கண்காணித்து கொண்டிருக்கிறார் என்றும், தவறுகளுக்கு நிச்சயமாக இந்து சமய அறநிலையத்துறையில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனவும், தமிழக முதல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் தான் தமிழகத்தில் ஒரு கால பூஜை திட்டத்தில் இருக்க கூடிய கோயில்களுக்கு ஒரு லட்சம் என்று இருந்ததை இரண்டு லட்சமாக மாற்றி தற்போது இரண்டரை லட்சம் ரூபாயாக வைப்பு நிதி வைத்திருக்கின்றார் என்றும், அந்த திருக்கோயில் 12 ஆயிரத்து 957 என்று இருந்த எண்ணிக்கை தற்போது 18 ஆயிரம் திருக்கோயில்களுக்கு நிதியை வழங்கியிருக்கின்றார். இதற்கு மட்டும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 200 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கீடு செய்திருக்கின்றார் எனவும், இது அரசின் உடைய பணம் திருக்கோயில் பணம் அல்ல, இந்த அனைத்து கோயில்களிலும் இந்த ஆண்டு தீபத்திருநாள் அன்று விளக்கு ஏற்ற வேண்டும் தீப ஒளி திருநாளில் தெய்வம் வெளிச்சத்தோடு இருக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.
Tags : போலி பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்அமைச்சர் சேகர்பாபு