ராகுல் காந்தியின் டுவிட் நீக்கம்

by Editor / 07-08-2021 09:16:02am
ராகுல் காந்தியின் டுவிட் நீக்கம்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் டுவிட் ஒன்றை டுவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சிறுமியின் தந்தையை கட்டியணைத்து ’நான் இருக்கிறேன் உங்களுக்கு’ என்று அவர் ஆறுதல் கூறியதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல்காந்தி பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிர்வாகத்திற்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.இந்த நோட்டீஸ் குறித்து ட்விட்டர் நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ராகுல் காந்தியின் டுவிட் நீக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் டுவிட்டர் நிர்வாகத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via