'திரிணமூல் தலைவர்களை அழைத்து வந்தது கட்சித் தலைமை செய்த தவறு'பாஜகவில் அதிருப்தி

by Editor / 07-09-2021 02:49:01pm
'திரிணமூல் தலைவர்களை அழைத்து வந்தது கட்சித் தலைமை செய்த தவறு'பாஜகவில் அதிருப்தி

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்தி, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாஜக பெரும் முயற்சி எடுத்தது. ஆனால் எதிர்க்கட்சியாக மட்டுமே அமர முடிந்தது. திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது.

இதனையடுத்து திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தலைவர்கள் மீண்டும் ஆளும் கட்சிக்கு தாவி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, முகுல்ராய் பாஜகவில் இருந்து மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து பிஷ்ணுபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ தன்மய் கோஷ், ஆளும் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார். மேற்குவங்க மாநிலம் கலியாகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ சவுமன் ராய் இன்று அந்த கட்சியில் இருந்து விலகி மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி முன்னிலையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். மேலும் ஒரு எம்எல்ஏவும் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

அடுத்தடுத்து மேலும் 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி தங்கள் தாய் கட்சியான திரிணமூல் காங்கிரஸுக்கு திரும்பியுள்ள நிலையில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக அவசரப்பட்டு அவர்களை பாஜகவில் சேர்த்ததே இந்தநிலைக்கு காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கூச் பிஹார் தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ நிகில் ரஞ்சன் தே இதுகுறித்து கூறியதாவது:

"திரிணமூல் தலைவர்களை பாஜகவுக்கு அழைத்து வந்தது கட்சித் தலைமை செய்த தவறு. அவர்கள் ஒருபோதும் பாஜகவின் கொள்கையுடன் ஒத்துப் போகக்கூடியவர்கள் அல்ல. மேற்கு வங்கத்தில் பாஜக தான் ஆட்சியை கைபற்றும் என்ற எண்ணத்தால் இவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

 

Tags :

Share via