ஆடு திருடிய 2 பேர் கைது

by Editor / 15-07-2023 11:20:15pm
 ஆடு திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லாகுளம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் சண்முகராஜ் (46) என்பவர் தனது ஆடுகளை  அவரது வீட்டின் முன்பு கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அதில் ஒரு ஆடு திருடுபோயுள்ளது.

இதுகுறித்து சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு. மாரிமுத்து மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்லாகுளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்களான சேவுகன் மகன் சுதாகர் (27) மற்றும் சித்திரைவேல் மகன் கருப்பசாமி (28) ஆகியோர் மேற்படி சண்முகராஜின் ஆட்டை திருடியது தெரியவந்தது.

 இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரிகளான சுதாகர் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 20,000/- மதிப்புள்ள திருடப்பட்ட ஒரு ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via
Logo