ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். அவரது உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11ம் தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டனை சென்றடைந்தது. எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 17ம் தேதி லண்டன் செல்லும் அவர் 19ம் தேதி வரை லண்டனில் இருக்கிறார்.
Tags :