இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் - ஜோ பைடன்

by Staff / 12-10-2023 01:56:33pm
இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் - ஜோ பைடன்

இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாத தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பயங்கரவாதிகள் சிறு குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை. குழந்தைகளின் தலைகள் வெட்டப்பட்டன. மக்களை காக்க, தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ள தாக்குதலுக்கு பதிலடி தர இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via