உ வே சாபிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்-முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தமிழறிஞர் உ வே சாமிநாத ஐயர் பிறந்தநாள் தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். சங்க இலக்கிய ஓலைச்சுவடிகளை தமிழகமெங்கும் தேடி கண்டறிந்து அவற்றை தொகுத்து நமக்கெல்லாம் தந்தவர். இவரின் தமிழ் இலக்கிய தொண்டால் நமக்கு சங்க இலக்கிய கருவூலம் கிடைக்கப்பெற்றது. பெருமைமிகு சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றியவர்.
Tags :