சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பி வெளியேறிய தண்ணீரால் . அரசூர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வரக்கூடிய தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Tags : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது