"தமிழ்நாடு நாள்" குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக்கண்காட்சி

by Admin / 18-07-2023 12:27:42pm

"தமிழ்நாடு நாள்" குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக்கண்காட்சி 18.07.2023இ ன்று நடைபெற்றது -

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் தாய் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என சட்டப்பேரவையில் பெயர் சூட்டிய 18.07.1967-ஆம் ஆண்டினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் நாளினை "தமிழ்நாடு நாள் " என்ற பெயரில் சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாடு நாள் விழாவினை மாவட்டம்தோறும் கொண்டாடிடும் வகையிலும்பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகளிடையே "தமிழ்நாடு நாள் " கொண்டாடப்படுவதன் வரலாறு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் விளக்கப்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி மற்றும் அது சார்ந்த புகைப்படக்கண்காட்சி நடத்தப்பபட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ நாபூங்கொடி. அவர்கள் தலைமையில் 18.07.2023 அன்று காலை 9.30 மணியளவில் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் துவக்கி வைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது

விழிப்புணர்வு பேரணியின் போது, பொதுமக்களிடையே தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கவுரை . விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திமாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

. தமிழ்நாடு நாள் குறித்து பொதுமக்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக்கண்காட்சி 18.07.2023 முதல் 23.07.2023 வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்கவுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ.நா.பூங்கொடிஅழைப்பு விடுத்தாா்.,

 

Tags :

Share via