10 ஆண்டுகளாக கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? காங்கிரஸ் கேள்வி

by Staff / 31-03-2024 02:14:09pm
10 ஆண்டுகளாக கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? காங்கிரஸ் கேள்வி

“கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ்தான் என்று பிரதமர் மோடி இன்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை “எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள், ஆறு மாதத்தில் இந்தியாவை தலைகீழாக மாற்றி விடுவேன் என்று மோடி கூறினார். ஆனால் 10 ஆண்டுகளாக மோடி தான் ஆட்சியில் இருக்கிறார். அவரால் ஏன் இன்னும் கச்சத்தீவை மீட்க முடியவில்லை? கச்சத்தீவை பேசுவதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஆக்கிரமித்து இருக்கிறது? என்பது குறித்து மோடி பேசட்டும்” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo