குமரி மாவட்டத்தில் கொரோனா  தொற்று பரவல்-6 பேருக்கு சிகிச்சை.

by Editor / 26-03-2023 07:27:33am
குமரி மாவட்டத்தில் கொரோனா  தொற்று பரவல்-6 பேருக்கு சிகிச்சை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பரிசோதனையை அதிகாிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மாநில அரசுகளுக்கு தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
மேலும் கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், குமரி எல்லை பகுதியில் தொற்று தடுப்பு பரிசோதனை மேற்கொள்ளவும், மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலும் நடமாடும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த சோதனையில் கடந்த 23-ந் தேதியன்று ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 84 வயது மூதாட்டி, விளவங்கோடு, மார்த்தாண்டம் பகுதிகளை சேர்ந்த 2 ஆண்களுக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது. 24-ந்தேதி நாகர்கோவிலில் 2 பெண்களுக்கும், மேல்புறம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு ஆணுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 தினங்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு உள்ளவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்த கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via