காவல் நிலையத்தில் தாக்குதல்... 5 போலீசார் மாற்றம்

by Editor / 02-07-2025 04:36:50pm
காவல் நிலையத்தில் தாக்குதல்... 5 போலீசார் மாற்றம்

தேனி தேவதானப்பட்டியில் விசாரணைக்கு அழைத்து வந்தவரை தாக்கிய வழக்கில் 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம், மது போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கினர். அந்த வீடியோ இன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து, ஆய்வாளர் அபூதுல்யா, காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி, வாலி உட்பட 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via