தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது புதிய புயல் இந்திய மக்கள் பயப்படத் தேவையில்லை.

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாக உள்ள Mocha புயலால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை எனவும் வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்வு இருப்பதாக இந்திய வானிலை மைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், இந்திய மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Tags :