பரப்பரப்பான சுழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனான மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது கூட்டணியை விட்டு முற்றிலும் வெளியேறுவதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து முடிவு எடுப்பார்என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : பரப்பரப்பான சுழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.