திமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் காலமானார்
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சாதாரண தொண்டர்கள் முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை, யாராக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை இவரிடம் தான் கொடுக்க முடியும். அந்த அளவுக்கு திமுகவில் செல்வாக்கு படைத்தவராக இருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும் நல்ல நண்பராக இருந்தவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவையொட்டி, சென்னையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Tags :
















.jpg)


