பகுதி நேர வேலை என கூறி ரூ. 55 லட்சம் மோசடி செய்த நபர் கைது

by Staff / 13-02-2024 12:09:31pm
பகுதி நேர வேலை என கூறி ரூ. 55 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னை: அம்பத்தூரை சேரந்த தனியார் வங்கி ஊழியரான பாலமுருகன் என்பவர் பேஸ்புக்கில் பார்ட் டைம் ஜாப் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்ட நம்பருக்கு வாட்ஸ் நம்பர் மற்றும் டெலிகிராமில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் பிட் காயின் டிரேடிங்க் என்ற பெயரில் பாலமுருகனுக்கு ஒரு user name & password கொடுக்கிறார்கள் அந்த கணக்கில் அவர் அவர்களுடன் சாட் செய்த போது அவரை பல வங்கி கணக்குகளில் பணம் போட சொல்கிறார்கள். அந்த பணத்திற்கு அவருக்கு லாபமாக வரும் பணத்தை அவருடைய வங்கி கணக்கில் போட்டு விடுவதாக மோசடி நபர்கள் கூறியதை நம்பி அவரும் சுமார் 55, 38, 625/- முதலீடு செய்கிறார். ஆனால் மோசடி நபர்கள் கூறியபடி பாலமுருகனுக்கு பணத்தை திரும்ப தராக காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் 1930 மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர், இ. கா. ப. , உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழிக் குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் பாலமுருகன் பண்ட் போட்ட வங்கி கணக்குகள் பற்றிய விபரங்களை எடுத்து பார்த்ததில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த டோமினிக் என்பவர் அவருடைய ஐசிஐசிஐ வங்கி கணக்குகளை பயன்படுத்தியது தெரிய வந்து அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via