இனி இந்த போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது சென்னை உயர்நீதிமன்ற

பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் இந்து, இஸ்லாமிய, ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சென்னையில் பேரணி நடத்த பாரத் ஹிந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
Tags :