தலை மீது ஏறிய லாரி

கோவை மாவட்டம் காடம்பாடியைச் சேர்ந்தவர் விகாஸ். இவர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து பின்னால் வந்த லாரி இவர் தலை மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே விவரம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :