கேரளாவுக்கு புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி நியமனம்

by Staff / 27-06-2023 02:54:48pm
கேரளாவுக்கு புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி நியமனம் கேரள மாநிலத்துக்கு புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை நியமிக்க இன்று முடிவு செய்யப்பட்டது. கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக டாக்டர் வி.வேணு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அந்த மாநிலத்தின் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹேப் பொறுப்பேற்பார். தலைமைச் செயலாளர் விபி ஜாய் மற்றும் டிஜிபி அனில் காந்த் ஆகியோர் ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் வி.வேணு 1990 ஐஏஎஸ் பேட்ச்சைச் சேர்ந்தவர். தர்வேஷ் சாஹேப் அதே ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சைச் சேர்ந்தவர்.
 

Tags :

Share via