டெல்லியில் தனியார் மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம்,டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகே உள்ள சத்யா நிகேதன் பகுதியில் 5 மாடிகளைக் கொண்ட தனியார் மாணவர் விடுதி மற்றும் பிஜி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதுத இந்த கொடூர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடம் ஹாஸ்டல் டேஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் மாணவர் விடுதியாகும்.
சுமார் 50 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடத்தில், தரைத்தளத்தில் மருந்தகமும், மேல் தளங்களில் மாணவர்களுக்கான தங்குமிடங்களும் செயல்பட்டு வந்தன.தரைத்தளத்தில்,அடித்தளத்தில் (Basement) பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், டெல்லியில் பெய்த கனமழையால் அடித்தளத்தில் நீர் தேங்கியிருந்ததே கட்டிடம் பலவீனமடைந்து இடிந்து விழக் காரணம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை மற்றும் டெல்லி காவல்துறையினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விதிமீறலில் ஈடுபட்ட விடுதி உரிமையாளர் மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கைபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Tags :



















