இன்று காவல் துறை மானியக் கோாிக்கையில் முதலமைச்சா் விஜய் பதிலளிக்கிறாா்.

by Admin / 07-09-2026 01:27:17am
இன்று காவல் துறை மானியக் கோாிக்கையில் முதலமைச்சா் விஜய் பதிலளிக்கிறாா்.

இன்று சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் பொழுது முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளார். கடந்த மூன்றாம் தேதி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்திருந்தார். அப்பொழுது பணியின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும் என்றும் ரூபாய் 212 கோடி மதிப்பீட்டில் காவல் துறை நவீனமாய்க்கப்பட வேண்டும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அவ் மானிய கோரிக்கை நிறைவாக சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களுக்கும் இன்று அவர் உரிய விளக்கங்களை அளிக்க உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo