முதலமைச்சர் விஜய் திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது கடுமையான மூலக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இன்று சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் விஜய் திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது கடுமையான மூலக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 1970களில் திமுக ஆட்சிக்காலத்தில் டென்டர்களில் 2.5% ஊழல் நடந்ததாக குறிப்பிடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் வீராணம் திட்ட முறைகேடுகள் குறித்தும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை டாஸ்மாக் நிறுவனங்களில் திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகள் தொடர்பான அமராக்கத் துறையின் ஆவணங்களை அவர் வாசித்துக் காட்டியதோடு டென்டர்களில் 7.5 முதல் 10% வரை கட்சி நிதி என்ற பெயரில் கமிஷன் பெறப்பட்டதாகவும் இந்த முறைகேடுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடியாக பயனடைந்ததாக அமலாக்கத்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் பேசினார் டாஸ்மாக் முறைகேடுகளில் முன்னாள் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டு கள்ளத்தனமாக கரூர் கேங் மூலம் கார் உரிமையாளர்களிடம் கட்சி நிதி வசூலிக்கப்பட்டதாகவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். முதலமைச்சர் விஜயின் பேச்சாள் அவையில் கடும் அமளி ஏற்பட்டது திமுக உறுப்பினர்கள் பேரவை தலைவர் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதோடு இது வெறும் அரசியல் பழிவாங்கல் என்றும் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படாத பெரும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக எப்படி காட்ட முடியும் என்றும் கூறியதோடு அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
Tags :


















