உணவில்லாமல் அலைந்த காட்டு யானை மயக்கம் அடைந்த நிலையில் தனியார் தோட்டத்தில் உடல்நிலை குறைவால் சுருண்டு விழுந்தது.

by Editor / 04-05-2024 12:08:45am
உணவில்லாமல் அலைந்த காட்டு யானை மயக்கம் அடைந்த நிலையில் தனியார் தோட்டத்தில் உடல்நிலை குறைவால் சுருண்டு விழுந்தது.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான புளியரை வனப்பகுதியில் பகவதிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான மா தென்னை உள்ளிட்ட தோட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றன இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பூலாங்குடியிருப்பு, பட்டு பூச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு தேடி நடமாடியுள்ளன. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் உணவு தேடி அலைந்த அந்த யானை அந்த வழியை சென்றவர்களையும்  விவசாயிகள் உள்ளிட்டவரின் விரட்டி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று பகவதிபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதியில் அந்த ஒற்றை யாணை ஒன்று உலா வந்துள்ளது. மேலும் மிகவும் உடல் சோர்வடைந்த நிலையில் உலா வந்த யானை உணவு தேடியும் நீர் தேடியும் அலைவதாக அறிந்த வனத்துறையினர் அதற்கு தேவையான உணவு மற்றும் தர்பூசணி பழம் உள்ளிட்டவைகள் அந்த பகுதியில் கொண்டு வைத்து விட்டு வந்தனர்.ஆனால் அதனை உட்கொண்ட யானை சிறிது நேரத்தில் சுமார் 3 மணி அளவில் தனியார் தோட்டத்தில் மயங்கி விழுந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் உடனடியாக கால்நடைத்துறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து மருந்து செலுத்தி உள்ளனர். மேலும் யானை மயங்கிய நிலையில் தனியார் தோட்டத்தில் படுத்த நிலையில் உள்ளது தொடர்ந்து அங்கு வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் யானைக்கு வாயில் புண் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உணவு இல்லாமல் சோர்ந்து நிலையில் யானை படுத்து கிடப்பதால் வனத்துறையினர் அதற்கு தேவையான உணவுகளை கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

 

Tags : உணவில்லாமல் அலைந்த காட்டு யானை மயக்கம் அடைந்த நிலையில் தனியார் தோட்டத்தில் உடல்நிலை குறைவால் சுருண்டு விழுந்தது.

Share via