கோத்தகிரியில் பாலிஷ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் நகை திருட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

by Admin / 21-01-2022 04:55:25pm
கோத்தகிரியில் பாலிஷ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் நகை திருட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

 
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கக்குச்சி கிராமத்தில் வசிப்பவர் நளினி. இவரது வீட்டிற்கு  பைக்கில் வந்த 2 பேர் தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். 

இதனை நம்பி நளினி தனது 5.5 பவுன் தங்க நகையை அவர்களிடம் பாலிஷ் போட கொடுத்துள்ளார். நகையை வாங்கிய அந்த நபர்கள் நகைளை பாலிஷ் போடுவது போல் செய்துள்ளனர். பின்னர் நளினியிடம் சுடு தண்ணீர் கேட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து நளினி வீட்டிற்குள் சென்று சுடு தண்ணீர் கொண்டு வந்து வெளியில் பார்த்தார்.
 
அப்போது அவர்கள் இருவரும் நகையுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நளினி கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில்  காவல் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையப் பகுதியில் பீகார் பகுதியை சேர்ந்த ஜனார்த்தன் என்பவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற சரவணன் என்பவரை கைது செய்தனர். 

இருவரிடம் காவல்துறை விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். பின்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via