75 நாட்களுக்குப் பிறகு   திருக்குறுங்குடி  திருமலை நம்பி கோயில்  ​திறப்பு

by Editor / 10-07-2021 05:42:54pm
75 நாட்களுக்குப் பிறகு   திருக்குறுங்குடி  திருமலை நம்பி கோயில்  ​திறப்பு

 

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் 75 நாட்களுக்குப் பிறகு  பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலை நம்பி கோயில் உள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.கொரோனா 2-வது அலை பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை அடுத்து கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இக்கோயில் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கடந்த 5-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு கோயில்களும் சுவாமி தரிசனத்துக்கு திறக்கப்பட்ட நிலையில் திருமலை நம்பி கோயில் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 75 நாட்களுக்குப்பின் கோயில் திறக்கப்பட்டது. தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் வனத்துறை சோதனைச் சாவடியில் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via