12 வயது சிறுமியை 72 வயது முதியவருக்கு விற்ற தந்தை

by Staff / 16-06-2024 04:47:56pm
12 வயது சிறுமியை 72 வயது முதியவருக்கு விற்ற தந்தை

பாகிஸ்தானில் 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்பவர், 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவரிடம் அந்நாட்டு மதிப்பின்படி, ரூ.5 லட்சம் பணம் பெற்று கொண்டு மகளை விற்றுள்ளார். அந்த முதியவர், சிறுமியை திருமணம் செய்ய முயன்றபோது, தகவலறிந்து வந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். முதியவரையும் கைது செய்தனர். எனினும், சிறுமியின் தந்தை சம்பவ பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார். பஞ்சாபின் ராஜன்பூர் பகுதியில் 11 வயது சிறுமியை 40 வயது நபர் திருமணம் செய்ய முயன்றார். இதேபோன்று தட்டா பகுதியில், 50 வயது பணக்காரர் ஒருவருக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via